நான் வேறு ஒருவரைப் பற்றிக் கவலைப்படுகிறேன்
எச்சரிக்கை அறிகுறிகள்
ஒருவரின் ஒருசில நடவடிக்கைகளிலிருந்தே, அவர் தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்தில் இருக்கிறாரா என்பதை அறிய முடியும்.
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: https://www.sos.org.sg/blog/suicide-warning-sign-here-where-to-start
நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ உடனடி ஆபத்தில் இருந்தால் 24மணி நேர அவசர மருத்துவ சேவைக்கு 995ஐ அழைக்கவும் அல்லது அருகில் உள்ள அவசர சிகிச்சைமையத்தை அணுகவும்.
24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444
யாரிடம் உதவி நாடுவது என்று குழப்பமா? எஸ் ஓ எஸ்ஐ இன்றே அணுகுங்கள்.
இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு (HOME)
2004 ல் நிறுவப்பட்ட ஹோம் (இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு)துஷ்ப்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிக்க இயங்குகிறது. மூன்று தூண்கள் எங்களை வழிநடத்துகிறது. நல்வாழ்வு, அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நலனுக்காக வாதிடுவது. மாநகராட்சி, அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுன் இனனந்து அனைவரையும் அரவனைப்பது, சமநிலை, நீதி, கவுரவம் வழங்குவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஹாட்லைன்:+65 6341 5535
தற்கொலை பற்றியோ அல்லது இறந்து போவது பற்றியோ பேசுவது, ; பேசும்போது “என்னால் என் நிலைமையை தாங்க முடியவில்லை” அல்லது “ இனி வாழ்வில் என்ன பயன் இருக்கிறது” என்று கூறுவார்கள். இந்த மாதிரியான பேச்சு தற்கொலை எண்ணங்களை மறைவாக வெளிப்படுத்துவது ஆகும்.
தற்கொலை செய்துகொள்வதற்கான வழிமுறைகளை தேடுதல்,செய்தல். உதாரணமாக இணையதளத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான வழிமுறைகளை தேடுதல் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் கருவிகளை (கத்தி, தூக்குக்கயிறு, பூச்சிமருந்து) வாங்குதல்
தான் எதற்கும் பிரயோசனம் இல்லாதது போல் உணர்வது; அல்லது தான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறுவது
தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் மறைக்கப்பட்டவர்களாக/ கண்ணுக்கு தெரியாதவர்களாக இருக்கக்கூடாது
வேறுசில நடவடிக்கைகளினால் கூட, ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்தில் உள்ளார் என அறிய முடியும். முக்கியமாக, அவரது நடவடிக்கை முற்றிலும் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம்,புதிய நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளுவது. அந்த புதிய நடவடிக்கை ஒரு இழப்பு, துயரச்சம்பவம், வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம் தொடர்பானவையாக இருக்கலாம்.
தாங்கமுடியாத அல்லது மீளமுடியாத துயரத்தைப் பற்றி பேசுவது
மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதாக கூறுவது
அதிகளவு மது மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பது
அதிக பதட்டம் அல்லது மனக்குழப்பத்துடன் செயல்படுவது, பொறுப்பற்ற முறையில் செயல்படுவது
குறைந்த நேரம் மட்டும் தூங்குவது
மற்றவரிடம் இருந்து விலகியிருப்பது அல்லது தனிமைப்படுத்தப் படுவதாக உணர்வது
அதிக கோபத்தை வெளிப்படுத்துதல் அல்லது பழி வாங்கத் துடிப்பது
மனநிலையில் தீவிர மாற்றங்கள் - ஊசலாடுகிய மனநிலை
உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின் உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444
டச்லைன் 1800-377-2252
சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019
உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/
மனநலப் பிரச்சனை உள்ள ஒருவருக்கு ஆதரவு அளிக்க உதவும் எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:
https://www.chat.mentalhealth.sg/get-the-facts/Practical-Tips/
தற்கொலை பற்றின உண்மைகள்:
https://www.chat.mentalhealth.sg/get-the-facts/suicide/
அமெரிக்கன் சைக்காலஜிகல் அசோசியேசன்
எச்சரிக்கை: தொழலாளர்களில் பெரும்பாலானோர் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது பற்றிய நிலையை நிர்வாகங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. உண்மை என்னவென்றால் மனநல பிரச்சினைகளுக்காக சிகிச்சை,மாத்திரை எடுத்துக்கொள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஓர் ஆராய்ச்சியின்படி, மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2001-ல் இருந்ததைவிட 22 சதவிகிதம் 2010-ல் கூடியிருப்பதாக கூறுகிறது. தோராயமாக, ஐந்து நபர்களில் ஒருவரேனும் மனநலப் பிரச்சனைகளுக்காக ஏதேனும் ஒரு மாத்திரையாவது எடுத்துகொள்வதாக ஆராய்ச்சி கூறுகிறது.