நான் தற்கொலையினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்
தனிப்பட்ட ஆதரவுக்கு:
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: http://www.sos.org.sg/
வாழ்க்கை உங்களைத் திணறச்செய்யும் போது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை நாங்கள் ஏற்படுத்தித்தருகிறோம்.
24/7 காது கொடுத்து கேட்க நாங்கள் இருக்கிறோம்
நீங்கள் வேண்டுமானால் அநாமதேயமாக (உங்கள்அடயாளத்தைவெளியிடாமல்) இருப்பதை தேர்ந்தெடுக்கலாம்
எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து விசயங்களும் ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
யாரிடம் உதவி நாடுவது என்று குழப்பமா? எஸ் ஓ எஸ்ஐ இன்றே அணுகுங்கள்.
24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444
மைண்ட்லைன்.எஸ்ஜி உங்கள் சுகாதாரம் மற்றும் நலத்தை பராமரிக்க உதவும் கருவிகள், உதவிக் குறிப்புகள், மற்றும் ஆதாரங்களை உங்களுக்கு அளிக்கிறது.
நீங்கள் கவலையாகவோ, பதட்டமாகவோ சோகமாகவோ உணருகிறீர்களா? நாங்கள் உதவமுடியும்: https://www.mindline.sg/
உங்களுக்கு, உடனடியான தீங்கு ஏற்படும் அபாயம் இருந்தால் 995ஐ அழைக்கவும் அல்லது ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லவும்.
சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பு: https://www.samhealth.org.sg/
எங்கள் 9 மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை நாங்கள் அளிக்கிறோம். ஆலோசனை, படைப்பாற்றல் சார்ந்த சேவைகள், வெளிப்புற சேவைகள் புனரமைப்பு, திறன்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.
எங்கள் கட்டணமில்லா தொலை பேசி சேவை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 1800-283-7019.
மனநல காப்பகம் தேசிய சுகாதார குழு, மனநலம் மேம்படுத்துதல்: https://www.imh.com.sg/
இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு (HOME)
2004 ல் நிறுவப்பட்ட ஹோம் (இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு)துஷ்ப்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிக்க இயங்குகிறது. மூன்று தூண்கள் எங்களை வழிநடத்துகிறது. நல்வாழ்வு, அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நலனுக்காக வாதிடுவது. மாநகராட்சி, அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுன் இனனந்து அனைவரையும் அரவனைப்பது, சமநிலை, நீதி, கவுரவம் வழங்குவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஹாட்லைன்:+65 6341 5535