உத்தி
கண்ணோட்டம்
தற்கொலை எண்ணங்களைத் தடுப்பதற்கு கல்வியும் விழிப்புணர்வும் அவசியம் தான், ஆனால் அவையே போதுமானவை அல்ல. மனநலக் குறைபாடுகளும் தற்கொலை உணர்வும் பெரும்பாலும் மறைந்தே இருப்பதால், கல்வி மற்றும் விழிப்புணர்வின் மூலமே, மக்கள் அவற்றைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வார்கள். இல்லையெனில், தவறான முன்மாதிரிகளும் தேவையற்ற அச்சங்களுமே அங்கே குடிகொண்டிருக்கும். முழுமையான தற்கொலை தடுப்பு பிரசாரத்தில், கல்வியும் விழிப்புணர்வும் தான் முக்கியமான முதற்படிகள். ஆனால், அவற்றை மட்டுமே செய்தால் போதாது. அதனால், மாற்றம் ஏற்படவும் செய்யாது. புகையிலை பயன்பாடு, போதைப் பழக்கம், மகிழுந்துகளில் பாதுகாப்புப் பட்டிகளை அணியாதிருப்பது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது போன்ற பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகளில் உள்ளது போன்றே, இங்கும் தகவல் மட்டுமே போதுமானதல்ல. ஒருங்கிணைந்த திட்டத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு வேறுசில கூறுகளும் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.
அதனால், வேலைத் தலத்தில் உள்ள பணியாளர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்த, எண்ணற்ற உத்திகள் உள்ளன: