கண்ணோட்டம் Construction Working Minds™
கண்ணோட்டம்
தற்கொலை போன்ற பொது ஆரோக்கியப் பிரச்சனைகளை, பல்வேறு கோணங்களிலிருந்து, பலவிதமான முறைகளின் வழியாக, ஒருங்கிணைக்கப்பட்ட, தொடர்ந்து செயலாற்றும் வழிமுறைகள் மூலமே, சிறப்பாக நாம் அணுகி, நிவர்த்தி செய்ய முடியும்.
செயல்படும் மனங்கள் திட்டம், வியூகங்கள் மிகுந்த கூட்டு முயற்சியையும், பணி இடத்தில் திறன் வளர்ப்பு முறையையும் பயன்படுத்தி, நேர்மறையான மனநலம் மற்றும் மீள்திறன் ஏற்பட வழி வகுக்கிறது. அப்பலன்கள் தொடர்ந்து நிலைத்து, கவனிக்கத்தக்க மாற்றங்களை நிலைபெறச் செய்கின்ற திட்டமாக விளங்குகிறது. இத்திட்டம் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட ஒரு நல்ல மாதிரித் திட்டம்ஆகும். தேசிய அளவில் பலருடன் கூட்டாக இணைந்து செயல்பட்டு, மரு.சாலிஸ் பென்ஸர் தாமஸ், கட்டுமானப் பணியில் ஈடுபடும் நிர்வாகங்களுக்கும், மற்றும் தொழில்சார் கூட்டமைப்புகளுக்கும், தற்கொலை தடுப்பு, மனநல மேம்பாடு மற்றும் மீள்திறன் மேம்பாடு ஆகியவை ஏற்பட பல்வேறு வியூகங்கள் மற்றும் வழிமுறைகள் ஏற்படுத்த உதவியுள்ளார்.
பணி இடங்களில் செயல் நடவடிக்கைக்கான சர்ஜன் ஜெனரலின் அழைப்பு:
பள்ளிகள் எப்படி இளைஞர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் இடமோ, அதுபோல், உழைக்கும் வயதிலிருக்கும் மக்களின் மனநலம் பேணவும், தற்கொலைகளைத் தடுக்கவும், பணி இடங்களில் வாய்ப்புகள் இருப்பதோடு, அவை எளிதில் அணுகக் கூடியவையாகவும் இருக்கின்றன.
சர்ஜன் ஜென்ரலின் தேசிய தற்கொலைத் தடுப்பு செயல் திட்டம் (2012), வெலை கொடுக்கும் முதலாளிகளை, தற்கொலைத் தடுப்பில் முக்கிய பங்குதாரராகக் குறிப்பிடுகிறது. நிறுவனங்களும், முதலாளிகளும் செயல்படுத்தக் கூடிய சில விசயங்களை பரிந்துரை செய்கிறது.
பணியாளர்களின் மன உணர்ச்சிகளின் ஆரோக்கியத்தில், முன்னேற்றம் ஏற்படும் விதமாக, நிறுவனத்தில், நிர்வாக ரீதியான சில மாற்றங்களை அமுல்படுத்த வேண்டும்.
நலத் திட்டங்களில் மனநலச் சேவைகளையும் கட்டாயம் இடம் பெறச் செய்து, பணியாளர்கள், அச்சேவையை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். சகஊழியர்கள் ஏதேனும் துன்பத்தில் இருந்தால் அதை கண்டறிந்து உதவ பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
பணியாளர் உதவித் திட்டத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள், தற்கொலை ஏற்படுவதற்கான சாத்தியத்தை கணித்து திறம்பட சமாளிக்க தேவையான திறனும் பயிற்சியும் பெற்றுள்ளார்களா என்று உறுதி செய்யவேண்டும்.
பணியாளர்களுக்கு வழங்கப்படும் மனநலச் சேவைகளில், தற்கொலையால் இறந்தவரை பிரிந்து துக்கத்தில் வாடுபவர்களுக்கான சிறப்பு ஆலோசனை (துக்கநிலைஆலோசனை) கட்டாயமாக இருப்பது அவசியம்.
பணி இடங்களில் செயல்படுத்தப்படும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள், தற்கொலை ஆபத்தைக் குறைப்பதில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.
தற்கொலை தடுப்பு இன்றியமையாதது. தற்கொலை இல்லாநிலை நம் குறிக்கோள்
பணிபுரியும் வயதான ஆண்கள் விரக்தியினால் ஏற்படும் மரணங்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்
சிங்கப்பூரில் கடந்த 2013 முதல் 2019 வரை சராசரியாக 405 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். தற்கொலை செய்து இறக்கும் ஒவ்வொரு 3 நபர்களில் 2 பேர் ஆண்கள் ஆவார்கள். 2019ல் தற்கொலை செய்து இறந்த 400 பேரில் சுமார் 65% (255 பேர்) 20 முதல் 55 வயதுள்ள வேலை செய்யும் ஆண்கள் ஆவார்கள். சிங்கப்பூரில், கட்டுமான வேலையில் ஈடுபடும் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் பங்களாதேஷ், இந்தியா, மியான்மார் மற்றும் சீனாவிலிருந்து வருகிறார்கள். அதீத மன அழுத்தம், கவணிக்கப்படாத மனநோய், வன்முறை, பேரதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள், போதை அளிக்கக்கூடிய பொருள்களின் துஷ்பிரயோகம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய மரணத்தை விளைவிக்கும் பொருள்கள் ஆகிய காரணிகள் மட்டுமில்லாமல் சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனையும் வாய்ப்பும் மிக மிக குறைவு. இவை அனைத்தும் சேர்ந்து மனநல பிரச்சனைகள் மற்றும் தற்கொலைக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. தற்கொலைக்கான அபாயம் அதிகம் உள்ள கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒரு விரிவான மற்றும் நிலையான திட்டத்தின் மூலம் மனநலம் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழிவகைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டு அவர்களின் முழு நல்வாழ்விற்கான ஆதரவை பெறுவார்கள்.
*கட்டுமான தொழில் நிறுவனங்களில் எத்தனை தற்கொலை நடந்துள்ளது என்பதற்கான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.