பயிற்சி



flickr usace-4.jpg

பணியிடத்தில், மனநலம் பேணப்பட வேண்டுமென்றால், இரண்டு அம்சங்கள் ஒருங்கிணைய வேண்டும். அவை, கலாசார மாற்றம் மற்றும் மேம்பட்ட திறன்கள் ஆகும். இந்த இரு தேவைகளுக்கும் ஏற்ப, ‘வொர்க்கிங் மைண்ட்ஸ்’ பல திட்டங்களை உருவாக்கியுள்ளது.

பணியிடங்களிலும் சமூகங்களிலும் தேவைப்படும் விழிப்புணர்வுக் கல்வியை வழங்குவதற்கு, ‘கன்ஸ்ட்ரக்‌ஷன் வொர்க்கிங் மைண்ட்ஸ்’ முக்கியமான கருத்துரைகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும், பயனாளிகளின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும் அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அவை மாற்றித் தரப்படும்.

முக்கியமான கருத்துரைகள் என்பவை, நல்வாழ்வு பயிற்சிப்பட்டறைகளுக்கும் வல்லுநர் மேம்பாட்டு முகாம்களுக்கும் வல்லுநர் சங்க கூட்டங்களுக்கும் பொருத்தமானவை. அந்த நிகழ்ச்சி 45 நிமிடங்கள் வரை நடைபெறும், இறுதியில் கேள்வி, பதில் பகுதி இருக்கும். என்ன தெரிவிக்கப் போகிறோம் என்பதற்கேற்ப பயனாளிகளின் எண்ணிக்கை அமையலாம். முக்கியமான கருத்துரை நிகழ்ச்சியில், பணியிடத்தில் கலாசார மாற்றத்தையே கொண்டுவர முயற்சி செய்வோம். இந்தப் பயிற்சியில், பணியிடத்தில் மனநல கருத்துகள் எவை என்பது அறிமுகம் செய்யப்படும், மாற்றங்களுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படும், கட்டுக்கதைகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும், இந்தப் பிரச்னைகளைக் குறித்தெல்லாம் பணியாளர்கள் பேசுவதற்கான இணக்கமான சூழல் உருவாக்கப்படும்.

பயிற்சிப் பட்டறைகளின் மூலம், குறிப்பிட்ட திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். இந்தப் பயிற்சிகளின் போது, பயனாளிகள் புதிய உத்திகளைக் கற்றுக்கொள்வதோடு, அதை உடனடியாக பயிற்சியும் செய்து பார்த்துக் கற்றுக்கொள்வார்கள். இத்தகைய பயிற்சிகள், ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் வரை நீளக்கூடும். இதில் 15 முதல் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும்.