தலைமைத்துவம்
பாட்காஸ்ட் :
தலைமைத்துவம், உத்தி மற்றும் அமைப்புரீதியான மாற்றம்: ஸ்டூவர்ட் பின்ஸ்டாக் & மைக்கேல் வாக்கர் உடன் பேட்டி
இலக்கு: தற்கொலையே கிடையாது
பாதுகாப்பையே ஒரு வலிமையான பண்பாடாக வளர்த்தெடுக்கும் வேலைத்தலங்களில், பணிநிமித்தமான மரணங்கள் எதுவுமே இருக்கக் கூடாது என்ற இலக்கை நிர்ணயித்துக்கொண்டிருக்கும். அதில், தற்கொலையும் விதிவிலக்கல்ல.
தற்கொலையே இருக்கக்கூடாது என்று கட்டுமானத் துறைத் தலைவர்கள் முடிவுசெய்து, அதனைத் தடுப்பதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய முனைந்தால் என்ன ஆகும்?
தலைமைத்துவம், வழிநடத்தும் முன்னோடியும் முக்கியமானவர்கள்!
தற்கொலையே இல்லை என்ற இலக்கு எட்டப்பட வேண்டுமென்றால், அதற்கான கொள்கைகளையும் நடைமுறைகளை வகுப்பதற்கு கட்டுமானத் துறைக்கான திட்டவடிவம் நிச்சயம் உதவக்கூடும். அனைத்து உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டியவையே!
எல்லா உயிர்களும் காக்க உகந்தவையே!
“உன் தலைவர் எதை மதிக்கிறாரோ அதையே நீயும் மதிக்கிறாய்.””
“தலைமைப்பண்பு என்பது பல்வேறு உத்திகளையோ, நடைமுறைகளையோ எடுத்துச் சொல்வது என்பதல்ல. மாறாக, அது மனத்தைத் திறந்து பேசுவது. தலைமைப்பண்பு என்றாலே உத்வேகம் தான். தனக்கும் பிறருக்கும் அந்த உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். மிகச் சிறந்த தலைமைப்பண்பு என்பது வழிமுறைகளைப் பற்றியதல்ல, மாறாக, மனித அனுபவங்களை உள்ளடக்கியது. தலைமைப்பண்பு என்பது ஒரு சூத்திரமோ, திட்டமோ அல்ல, மாறாக அது இதயத்தில் இருந்து தோன்றி, அடுத்தவர்களுடைய இதயங்களைப் போய்ச் சேரும் ஒரு மகத்தான செயல்பாடு. அது ஒரு குணாதிசயம், அன்றாட நடைமுறையல்ல.”
- லான்ஸ் செக்ரடன், இன்ஸ்டரி வீக்
ஒரு தொழிலில், அனைத்து வெற்றிகரமான நடைமுறைகளும், தலைமைப்பண்பே மிகவும் அடிப்படையான காரணமாகும். ஏனெனில், அந்த நிறுவனத்தில் எவையெல்லாம் மதிக்கப்படுகின்றன என்பதற்கான தொனியைத் தலைமையேற்பவரே நிர்ணயிக்கிறார். ஒரு நிறுவனத்துக்குள் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று தொடர்ந்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும். அதில், மனிதவளமே மிகவும் மதிப்புமிக்க வளம் என்பதைப் பலரும் உணர்ந்துகொள்வார்கள். சிறந்த நடைமுறைப் பயிற்சியான, தற்கொலை தடுப்புக்கான விமானப்படை மாதிரி வெற்றிகரமான மாதிரியாகும். இதற்கு, மேலிருந்து கீழ்வரை பாய்ந்த அதன் பார்வையே முக்கிய காரணமாகும். இதை நடைமுறைப்படுத்திய தலைவர்களின் செயற்பாடுகளால், நம்முடைய இராணுவ பிரிவுகளில் மிகப்பெரிய அதிர்வலையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இவர்கள், இராணுவப் பிரிவுகளில் மறைந்திருந்த ஏராளமான பிரச்னைகளை நேரடியாக சந்தித்துத் தீர்த்துவைத்தார்கள். தலைமையேற்பவரது நம்பகமான செய்திகளும் மாதிரிகளுமே ஒருசில சமயங்களில், நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எளிய வழிமுறைகளாக இருக்கும்.
மனநல பாதிப்புகள் தொடர்பான விஷயங்களில், தலைமையேற்பவர் உங்கள் நிறுவனத்துக்குள் என்ன விதமான செய்தியையும் மாதிரிகளையும் முன்னெடுப்பார்?
கொள்கைகளை வகுத்தல்
தற்கொலை பிரச்னைகளை எதிர்கொள்ளல்
தைரியமாக இருத்தல்
நம்பிக்கை அளித்தல்
முன்னுதாரணமாக இருத்தல்
வித்தியாசமான தலைவர்கள்
தற்கொலை மற்றும் மனநோய் களங்கத்தை குறைப்பதற்காகவும், மக்களை தடுப்பு இயக்கத்தில் ஈடுபடுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நடந்த அனுபவத்தின் கதைகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் தற்கொலை தடுப்பு இயக்கத்தை மனித நேயமாக்கி பிறரின் உதவியை நாட உதவுகின்றன. இந்தத் தற்கொலையிலிருந்து தப்பியவர்களின் கதைகளையும், இழப்பிற்குப் பிறகு அதன் அர்த்தத்தை கண்டு பிடிப்பதை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
கால் பேயர் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி சாலிஸ்பென்ஸர்- தாமஸின் நண்பர். அவர் எங்கள் நிர்வாகத்துக்கும் நல்ல நண்பர். அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தற்கொலை செய்து இறந்தார். அன்றையிலிருந்து அவர் இழப்பிற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள கண்டுபிடிக்கிறார். அவரது நண்பரின் ஆண்டு நிறைவு நெருங்கி வருவதால் இழப்பின் மூலம் அதன் அர்த்தத்தை கண்டு பிடிக்கும் கால் கதையை பகிர்ந்து கொள்ள விரும்பினோம். இது அவரது கதை: மேலும் வாசிக்க...
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கான கூடுதல் விவரங்கள் : நான் ஒரு தலைவன்