விமானப்படை மாதிரி



பணி இடத்திற்கான சிறந்த வழிமுறைகள்:  யூ.எஸ். விமானப்படையின் தற்கொலை தடுப்பு திட்டம்.

“ நம்முடன் தற்சமயம் பணியில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஆதரவுச் சேவைகளை அளிப்பது நம்முடைய பொறுப்பாகும். அச்சேவைகள், ஆரோக்கியமான, தகுதியானபடையை உறுதி செய்வதோடு, தேவையானவர்களுக்கு உதவி வழங்குவதாகவும் இருக்க வேண்டும். இதுவே விமானப்படையின் தற்கொலை தடுப்பு திட்டத்தின் அடிப்படை ஆகும். 

“நம் விமானப்படையின் பலம் அதில் பணி புரியும் நபர்களின் பலத்தை பொருத்ததே என்பதை முன்பு எப்பொழுதையும் விட இப்பொழுது நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.” – ஜெனரல்ஜம்பர்

சான்றுகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தேசிய பதிவில்,தற்சமயம் இரண்டே இரண்டு திட்டங்கள் தான் இடம் பெற்றுள்ளன.ஒன்று பதின் பருவத்தினருக்கானது ( தற்கொலையின் அறிகுறிகள் – சைன்ஸ் ஆஃப்ஸ்யூசைட் -எஸ்.ஓ.எஸ் திட்டம்.) மற்றொன்று யூ.எஸ்.விமானப்படை தற்கொலை தடுப்பு திட்டம்.  இந்த தேசிய பதிவு ஆணையம், நிபுணர்களின் குழுகொண்டு ஒவ்வொரு திட்டத்தின் ஆராய்ச்சியின் தரத்தையும், பரப்புவதற்கான தயார் நிலையையும் தணிக்கை செய்கிறது. அதனால், விமானப்படையின் மாதிரி,  இன்று பணி இடங்களுக்கான மாதிரிகளில் முதன்மையானதாகும்.


தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணுக்குத் தெரியதவர்களாக இருக்கக்கூடாது.


ஜந்தாண்டு காலத்தில் தற்கொலை விகிதங்கள்அதிகரித்ததால், மேலே கூறியது போல, தற்கொலை என்ற பொது சுகாதாரப் பிரச்சனைக்கு, தீர்வு காணும் பணியில் பங்கேற்கும் பொறுப்பு, விமானப்படைக்கு இருப்பதை உணர்ந்து, விமானப்படை ஒரு விரிவான தற்கொலை திட்டத்தை நடைமுறைபடுத்த முனைந்தது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது விமானப்படையின் தற்கொலை விகிதம் கம்மியாக இருந்த போதும் இந்த முடிவு நிகழ்ந்தது.

விமானப்படையின் தலைமை அதிகாரியின் உறுதியான வெளிப்படையான ஆதரவு, அவரின் கீழ் பணிபுரிபவர்களும் இத்திட்டத்தை எளிதில் ஒப்புக் கொள்ள வழிவகுத்ததோடு, மற்ற தலைவர்களையும், தற்கொலைத் தடுப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசுவதற்கு ஊக்கம் அளித்தது. மேலும் தற்கொலை தடுப்பில் சமுதாயக் காவலர்களாக அவர்களது பொறுப்பை தலைவர்களுக்கு உணர்த்தியது.

flickr natesh ramasamy.jpg

இந்த திட்டத்தின் நடைமுறைப்படுத்தலில் 5 பகுதிகள் உள்ளன:

  1. சமூக விழிப்புணர்வை சந்தைப் படுத்துதல் மூலம் சமூக நியமங்களை மாற்றுதல்.

  2. கல்வி பயிற்சி மற்றும் தடுப்பு சேவைகள் மூலம் சமூக உறுப்பினர்களை பயிற்றுவித்தல்.

  3. நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தளம் (தரவுதளம்) மற்றும் சமூக நடவடிக்கைகளின் தகவல் வாரியம் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் கண்காணிப்பை மேம்படுத்துதல்.

  4. முக்கியமான/ நெருக்கடியான நிகழ்வுகள் ஏற்படும் போது மன அழுத்த மேலாண்மை

  5. வழிபாட்டுக் கூடங்கள், மனநல சேவை, நிதி ஆலோசனை, தொழில் ஆலோசனை, சுகாதாரப்பணி ஆகிய பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பிறரின் கூட்டு முயற்சி, மற்றும் பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து,  மனிதசேவைக்காக, தற்கொலை தடுப்புத்திட்டம் தொடங்கியபொழுது, 350,000 விமானப்படை உறுப்பினர்கள் இடையே, தற்கொலை, மரணத்திற்கான 2வது முக்கியகாரணமாக இருந்தது. ( தற்கொலைவிகிதம் : 15.8/100,000).

    இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தற்கொலை விகிதம் 3.5 ஆக குறைந்துள்ளது. இதுவரை இதுவே மிகக் குறைந்த பதிவாகும். இதில் சுவாரசியமான இன்னொரு விசயம், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது,  வன்முறை குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் தற்செயலான காயங்களால் ஏற்படும் மரணங்கள் ஆகியவற்றின் விகிதங்களும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக புள்ளியியல் விவரங்கள் காட்டுகின்றன