கார்ல் பேயர்: எனது நண்பர்,சக ஊழியரின் தற்கொலைக்கு பிறகு அதன் காரணத்தை கண்டுபிடிப்பதற்கு நான் எடுத்துக் கொண்ட ஒரு பயணம்

எமிலி ஆல்வரேஸ்

தற்கொலை மற்றும் மனநோய் களங்கத்தை குறைப்பதற்காகவும், மக்களை தடுப்பு இயக்கத்தில் ஈடுபடுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நடந்த அனுபவத்தின் கதைகள் மிகவும் உதவியாக இருக்கும்.  மேலும் தற்கொலை தடுப்பு இயக்கத்தை மனித நேயமாக்கி பிறரின் உதவியை நாட உதவுகின்றன.  இந்தத் தற்கொலையிலிருந்து தப்பியவர்களின் கதைகளையும், இழப்பிற்குப் பிறகு அதன் அர்த்தத்தை கண்டு பிடிப்பதை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

கால் பேயர் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி சாலிஸ்பென்ஸர்- தாமஸின் நண்பர்.  அவர் எங்கள் நிர்வாகத்துக்கும் நல்ல நண்பர்.  அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தற்கொலை செய்து இறந்தார்.  அன்றையிலிருந்து அவர் இழப்பிற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள கண்டுபிடிக்கிறார்.  அவரது நண்பரின் ஆண்டு நிறைவு நெருங்கி வருவதால் இழப்பின் மூலம் அதன் அர்த்தத்தை கண்டு பிடிக்கும் கால் கதையை பகிர்ந்து கொள்ள விரும்பினோம்.

இது அவரது கதை:

என்னுடைய அன்பான நெருங்கிய நண்பரான ஜெப்பை பிப்ரவரி 23ஆம் தேதி 2015ல் இழந்தேன்.  அவருக்கு வயது 51.  அவர் தற்கொலை செய்து கொண்டார்.  அன்பான மனைவி, 3 வளர்ந்த குழந்தைகள் மற்றும் நண்பர் படையையும் விட்டுவிட்டு ஜெப் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.  நாங்கள் எல்லோரும் அவருடைய இறப்புக்கு குழம்பினோம்.  அவர் சில நேரங்களில் தனிமை மற்றும் சோகத்துக்கு ஆளாகிறார் என்பது பலருக்கு தெரியும்.  அவர் இவ்வளவு காலமாக இருள் மற்றும் விரக்தியின் விளிம்பில் சிக்கிக் கொண்டார் என்பது நம்மில் எவருக்கும் புரியவில்லை.

நான் ஜெப்பை ஒரு புதிய தொடக்க நிறுவனத்தில் வேலை செய்யும் போது அவரை வேலைக்கு சேர்த்தேன்.  நானும், ஜெப்புவும் 7 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம்.  நாங்கள் வேலையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் நாளடைவில் நெருங்கிய நண்பர்களாக மாறினோம்.  ஜெப் 6’4” உயரம் மற்றும் பெரிய உருவம் கொண்டவர்.  அவருடைய குணங்களில் நகைச்சுவை உணர்வும் உள்ளடங்கியது.  இதனால் இவருக்கு ‘டைனீ” மற்றும் ‘பிக் த்வாக்” என்ற புனைப் பெயருகளுடனும் கூப்பிடுவர்.  இவர் மீன் பிடித்தலை மிகவும் விரும்பினார்.  ஜெப்புக்கு மீன் பிடித்தல் மிகுந்த மற்றும் மனதை கவர்ந்த பொழுதுபோக்காக இருந்தது.  அநேகமாக அவர் வாழ்வதற்கான காரணம் மீன் பிடித்தல் என்று கூடச் சொல்லலாம்.  ஜெப் மீன் பிடிப்பதில் கிடைக்கின்ற சந்தோஷத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினார்.

ஜெப் மிகவும் விசுவாசமானவர், நம்பகமானவராக வேலை பார்க்கும் இடத்தில் இருந்தார்.  மேலும் அவர் முறையான விதத்தில் வளமாகவும், புத்திசாலித்தனத்துடனும் வேலை பார்த்தார்.  அவர் மற்றவர்களுடைய வேலைத் திட்டங்கள் வெற்றி பெற உதவ எதையும் செய்வார்.

ஜெப் தன்னை ஒரு நபராகவும், சக ஊழியராகவும் நான் உணர்ந்து மதித்ததை எனக்கு நன்றி தெரிவித்து என்னை நெகிழ வைத்தார்.  விரைவிலேயே நாங்கள் வேலையிடத்தில் பயனள்ள பணி உறவை உருவாக்கினோம். நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியது.  நான் என் வாழ்க்கையில் நடப்பனவற்றை பகிர்ந்து கொள்ளும் மனிதர்களுள் ஜெப்பும் ஒருவர் ஆவார்.

Jeff -Cal Blog.jpg

நான் மீன பிடிக்க எப்போதும் போனதில்லை.  ஆனால் ஜெப்புடன் ஒருமுறை சென்றேன்.  அவர் என்னை ஏற்றுக் கொண்டார்.  அன்பின் அடிப்படையில் நாங்கள் ஆழ்ந்த நட்பை பகிர்ந்து கொண்டோம்.  என் மனைவி, குழந்தைகளிடம் அவர் வைத்திருந்த அன்பு, என் மனதை தொட்டது.  ‘பிக் திவாக்” எங்களுடன் இருக்க வேண்டும் என்று சொன்னால், எனக்குத் தெரியும், எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் வந்து நிற்பார்.

என் குழந்தைகள் ஜெப்பை மிகவும் நேசித்தார்கள்.  ஏனென்றால், ஜெப் அவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டினார்.  என்னுடைய முக்கியத்துவத்தை என் குழந்தைகளுக்கு புரியவைத்தார்.  நான் வேலை செய்யும் இடத்தில் என் குழந்தைகள் பற்றி அக்கறையாகவும், பாசமாகவும் பேசி ஜெப் தனது அன்பை வெளிப்படுத்தினார்.   இவையெல்லவற்றையும் பார்க்கும்போது நாங்கள் உண்மையான நண்பர்கள் என்று எனக்கு காட்டின.  அலுவலகத்தில் மற்றவர்களிடம் விளையாட்டாக கேலி செய்வது போன்றவற்றை நேசித்தோம்.  அலுவலகத்தில் ஒரு மினி கோல்ப் மைதானத்தை உருவாக்கி, மணல், பொறி மற்றும் நீர் துளைகள், பெரிதாக்கப்பட்ட பிளாஸ்டிக் குழந்தை கோல்ப் செய்து சந்தோஷப்பட்டோம். பல வருடங்களுக்கு பிறகு இந்த அனுபவங்கள் எங்களுக்குள் சிறுவயது ஞாபகங்களை நினைவூட்டியது.  இது எங்களை மணிக்கணக்கில் சிரிக்க வைத்தது.  என் நடுத்தர வயதில் வேறு யாரும் ஜெப்பை விட என்னை சிரிக்க வைத்ததில்லை.   அவர் இறந்த போது அவரது குடும்பத்தாரையும், பின்னர் எங்கள் ஊழியர்களையும் அமைதிப்படுத்துவதில் உறுதுணையாக இருந்தேன்.  இதில் எனக்கு என்று உள்ள சொந்த துக்கம் நினைக்க தாமதமாகியது.  இது என் இயற்கை குணமாகும்.  முதலில் நான் இக்கட்டான சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு உதவுகிறேன்.  பின்னர் காலப்போக்கில் நானே என்னுள் உள்ள பிரச்சனையை சமாளிக்கிறேன்.  ஆரம்பத்தில் என்னுள் குற்ற உணர்வு இருந்தது.  ஒரு வேளை இந்த நிறுவனத்தில் மேலாளராக இருந்திருந்தால் அவருக்கு தற்கொலை எண்ணம் வராமாலிருக்க, தடுக்க உதவியாக இருந்திருப்பேன்.  உண்மை என்னவென்றால், நான் 2010ல் இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினேன்.  நான் வெளியேறினாலும், ஜெப்பும் நானும் தொடர்பில் இருந்தோம்.  நான் ஊரில் இருக்கும்போதெல்லாம் அவரும் நானும் ஒன்றாக சேர்ந்து நேரம் கழிக்க முயற்சிப்போம்.

இறுதிச் சடங்கின்போது ஜெப் குடும்பத்தினர் ஜெப்பின் தற்கொலை மற்றும் அவர் வாழ்நாள் முழுவதும் மனநலப் பிரச்சனைகளை போரிட்டது பற்றி திறந்த மனப்பான்மையுடன் கலந்து பேசி அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.  இது என்னையும் என் குடும்பத்தாரையும் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் எங்களுடைய வருத்தத்தை தெரியப்படுத்த முடிந்தது.  ஜெப்பின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்று எங்களுக்கு தெரிய வந்தது.  அவர் பாஸ்டரை வாரம் தோறும் சந்தித்தார் என்பது அவர் குடும்பத்தினர் கலந்து பேசியதால் ஜெப்பை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.  நான் ஜெப்பை நேசித்தேன்.  அது அவருக்குத் தெரியும் என்று எனக்கு தெரியும்.

ஜெப் இறப்பதற்கு முன்பு நான் சாலி-ஸ்பென்ஸர் தாமஸ் உடன் கூட்டாளராக இருந்தேன்.  2010 முதல் தொடக்க உறுப்பினராக வேலை செய்தேன்.  2014ம் ஆண்டில் சாலி என்னை வேலை செய்ய பணிக்குழுவிற்குத் திரும்பும்படி அழைத்தார்.  தற்கொலை தடுப்பு தொடர்பானவற்றை முன்நின்று நடத்தச் சொன்னார்.  சாலி ஒரு முறை வெள்ளை மாளிகையில் நடக்கும் ‘ஆண்களின் உடல்நலம் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் மற்றவர்களுடன் அழைத்தபோது நான் உண்மையிலேயே என்னுள் ஒரு வித்தியாசம் ஏற்படுவதை உணர்ந்தேன்.

தற்கொலை தடுப்புக்கான தேசிய நடவடிக்கை கூட்டணிக்கான செயற்குழுவில் பணியாற்றுவதற்காக என்னை நியமனம் செய்து எனக்கு மேலும் அதிகாரத்தை அளித்தது.  நிதி சேவை, உதவியாளர்களை நியமித்தல் மற்றும் மனநலம், தற்கொலை  தடுப்பு தொடர்பான கூட்டணிகளை உருவாக்குவதற்கான தேவையை விரிவுபடுத்தி பேசுவதற்கு ஒரு வாய்ப்பாகும்.

கட்டுமான துறையில் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்புக்கான காரணங்களை ஊக்குவிக்க உதவும் எனது முயற்சிகளில் ஜெப் எவ்வளவு பெருமைப்படுவார் என்பதை ஜெப்பின் மனைவி ஜேன் என்னுடன் பகிர்ந்து கொண்;டது குறிப்பிடத்தக்கது.  பின்தங்கியவர்களுக்காக நான் நடத்திய போராட்டம் மற்றும் இதன் காரணத்தை புரிந்து கொள்வதில் நான் காட்டும் அக்கறை, ஆகிவற்றை நினைத்து ஜெப் பெருமைப்படுவார் என்று ஜேன் கூறினார்.

தற்கொலையால் பாதிக்கப்பட்ட எவருக்கும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க நான் ஊக்குவிக்கிறேன்.  நீங்கள் உறுதியாக இருக்க நம்பிக்கையை கைவிடாதீர்கள்.  நீங்களே தீர்ப்பு சொல்வது மற்றும் பழிபோடுவதைத் தவிர்த்து யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.  நீங்கள் பேசிய அல்லது பேசப்படாத வார்த்தைகளுக்கு நீங்களே மன்னித்துக் கொள்ளுங்கள்.  எதிரொளிக்கும் நேர்மறையான அனுபவங்களையும், நினைவுகளையும் நினைவில் வைத்து அவற்றை மதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்திருந்து வெளிப்படையாக அடிக்கடி உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  தனிமையாக இருக்காதீர்கள்.  உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.  தயங்காமல் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் அடிக்கடி வரட்டும்.