நான் ஒரு பாதுகாப்பு மேலாளர்


பெரும்பாலான கட்டுமான துறை நிறுவனங்கள், எல்லா நேரங்களிலும் தொழிலாளர் பாதுகாப்பு காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்துவருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தொழிலாளர்களின் ஆரோக்கியமான மனநிலை பற்றி அக்கரை கொண்டு வருகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பின் முக்கிய இலக்கு “அசம்பாவிதங்கள் இல்லாமை” என்பதேயாகும். ஆனால் தற்கொலை இல்லாமை என்பதை யாரேனும் இலக்காக கொண்டால், அது நம்பகத்தன்மை இல்லாத இலக்கு என்று பலர் கருதி வருகின்றனர். நாங்கள் இந்த இலக்கு சாத்தியம் என்று முழுதாக நம்பி அதை அடைவதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்கு தயாராக உள்ளோம் என்று சொன்னால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள,  CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின்  உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.chat.mentalhealth.sg/

உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின்  உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444

  • டச்லைன்  1800-377-2252

  • சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/

மனநலப் பிரச்சனை உள்ள ஒருவருக்கு ஆதரவு அளிக்க உதவும் எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்: https://www.chat.mentalhealth.sg/get-the-facts/Practical-Tips/

தற்கொலை பற்றின உண்மைகள்: https://www.chat.mentalhealth.sg/get-the-facts/suicide/


சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பு: https://www.samhealth.org.sg/

எங்கள் 9 மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை நாங்கள் அளிக்கிறோம். ஆலோசனை, படைப்பாற்றல் சார்ந்த சேவைகள், வெளிப்புற சேவைகள் புனரமைப்பு, திறன்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

எங்கள் கட்டணமில்லா தொலை பேசி சேவை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 1800-283-7019


மனநல காப்பகம் தேசிய சுகாதார குழு, மனநலம் மேம்படுத்துதல்: https://www.imh.com.sg/


யாரிடம் உதவி நாடுவது என்று குழப்பமா? எஸ் ஓ எஸ்ஐ இன்றே அணுகுங்கள்: https://www.sos.org.sg/


சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவக்கூடிய தகவல்கள்

 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மையம்(எம்.டபிள்யு.சி):நியாயமற்ற வேலை வாய்ப்பு நடைமுறைகளிலிருந்து தீர்வு பெற நாடி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஆலோசனை மற்றும் உதவியை அளிக்கிறது எம்.டபிள்யு.சி.

புலம் பெயர்ந்தவர்களை சமூகத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளவும் அவர்களை சமூகத்தில் ஒருங்கினைக்கவும், எம்.டபிள்யு.சி,சமூக நடவடிக்கைகள், சமூக ஈடுபாடு, அவர்கள் சார்பாக பரிந்துரைகள் வழங்குவது, பொது கல்வி ஆகியவற்றின் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கிடையில் சமூக ஒருங்கிணைப்பை மேப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் தளங்களையும் வழங்குகிறது.

எம்.டபிள்யு.சி 24 மணி நேர உதவி எண்: +65 6536 2692

ஹெல்த் செர்வ்:சுகாதாரம் பேணுவதே ஹெல்த் செர்வின் உயிர் துடிப்பு ஆகும். கேலாங், ஜுராங் மற்றும் மண்டாய் ஆகிய இடங்களில் உள்ள ஹெல்த் செர்வின் மருத்துவமனைகள், முதலாளிகளிடமிருந்து சுகாதரம் சார்ந்த உதவிகள் கிடைக்காத காயப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை அளிக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலையின் போது ஏற்படுகின்ற காயம், அதற்கான இழப்பீடு, கோரிக்கைகள் மற்றும் சட்ட, குற்றவியல் அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்களுக்கான கேஸ்வொர்க் மற்றும் சட்ட ஆதரவை ஹெல்த்செர்வ் வழங்குகிறது. அவரது வழக்கின் நிச்சயமற்ற முடிவைச் சமாளிப்பதற்கான போராட்டங்களிலிருந்து பெரும் மன அழுத்தம் மற்றும் உணர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. 

ஹெல்த் செர்வ் ஹாட் லைன்: +65 3138 4443

ட்ரண்சியண்ட் வொர்க்கர்ஸ் கவுண்ட் 2 (TWC2):

டி.டபிள்யு.சி2 செய்யும் வேலையை இரண்டு விதமாக பிரிக்கலாம். வக்காலத்து மற்றும் நேரடி சேவைகள். பாதிக்கப்படக்கூடிய சமூகமாக உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான காரணிகள் மீது கவனம் கோருவதே வக்காலத்து ஆகும். இக்காரணிகள் சமூக நிலைமைகள், கட்டமைக்கப்பட்ட சட்டதிட்டங்கள் அல்லது பெருநிறுவனங்களின் முன்னுரிமைகள் ஆகியவற்றிலிருந்து உருவெடுக்கிறது. இங்கே மற்றும் இப்போது, தொழிலாளர்கள் சந்திக்கும் உடனடி பிரச்சனைகளுக்கு உதவி தேவைப்படுகிறது. டி.டபிள்யு.சி2 வின் நேரடி சேவைகள் இத்தகைய உதவியை அவர்களிடம் உள்ள வசதிகளை கொண்டு வழங்குகிறது.

ஹாட்லைன்:+65 6247 7001

இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு (HOME):

2004 ல் நிறுவப்பட்ட ஹோம் (இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு)துஷ்ப்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிக்க இயங்குகிறது. மூன்று தூண்கள் எங்களை வழிநடத்துகிறது. நல்வாழ்வு, அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நலனுக்காக வாதிடுவது. மாநகராட்சி, அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுன் இனனந்து அனைவரையும் அரவனைப்பது, சமநிலை, நீதி, கவுரவம் வழங்குவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஹாட்லைன்:+65 6341 5535


உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு தற்கொலைத் தடுப்பு எப்படி இன்றியமையாததாக ஆக்குவது:

உயிர்களை காக்க நிறுவனங்கள் எடுக்கக்கூடிய 10 நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்

உயிர்களை காக்க நிறுவனங்கள் எடுக்கக்கூடிய 10 நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்

 

குறிப்பு:  எப்பொழுதும் தற்கொலை எண்ணங்கள் மற்றும் முயற்சிகளை முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக கவனிக்க வேண்டும். அவை ஒருவர் நிராதரவாக உதவி கோருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.

குடிப் பழக்கம், போதை பொருட்கள் உபயோகிப்பதற்கு, பெரும்பாலான நேரங்களில் உடல்வலி ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. ஏனெனில் வேலைப் பலு அதிக உடல்வலி உண்டாக்கும். உடல்வலி அதிகமாகும் பொழுது, அதிகமாக குடிப்பதோ அல்லது போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளவோ செய்வார்கள்”
— கள மேலாளர்
flickr louisville usace.jpg