நான் ஒரு நெருக்கடி நிலையில் உள்ளேன்


நான் இப்பொழுது யாரிடமாவது பேச வேண்டும்:

சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்
வாழ்க்கை உங்களைத் திணறச்செய்யும் போது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை நாங்கள் ஏற்படுத்தித்தருகிறோம்.

  • 24/7 காது கொடுத்து கேட்க நாங்கள் இருக்கிறோம்

  • நீங்கள் வேண்டுமானால் அநாமதேயமாக (உங்கள்அடயாளத்தைவெளியிடாமல்) இருப்பதை தேர்ந்தெடுக்கலாம்

  • எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து விசயங்களும் ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

    24 மணி நேரஹாட்லைன் தொலைபேசி: 1800-2214444
    https://www.sos.org.sg/

யாரிடம் உதவி நாடுவது என்று குழப்பமா? எஸ் ஓ எஸ்ஐ இன்றே அணுகுங்கள்.

flickr dvivshub.jpg

சமூக ஆரோக்கிய மதிப்பீடு குழு  சாட்

https://www.chat.mentalhealth.sg/

உங்களுக்கு தற்கொலை  எண்ணம் தோன்றி உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றால்:

999 என்ற எண்ணை அல்லது சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூரை (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444 என்ற எண்ணில் அழைக்கவும் ( இரண்டும் 24/7 செயல்படும்). உங்களை யாராவது அணுகும் வரை தொலைபேசியில் இணைப்பில் இருங்கள். அல்லது அருகில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பகுதியை அணுகி உதவிபெறுங்கள்.

உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின்  உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444

  • டச்லைன்  1800-377-2252

  • சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/


சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்க எனக்குஉதவிதேவை:

சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பு

எங்கள் 9 மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை நாங்கள் அளிக்கிறோம். ஆலோசனை, படைப்பாற்றல் சார்ந்த சேவைகள், வெளிப்புற சேவைகள் புனரமைப்பு, திறன்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

எங்கள் கட்டணமில்லா தொலை பேசி சேவை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 1800-283-7019.


இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு (HOME)

2004 ல் நிறுவப்பட்ட ஹோம் (இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு)துஷ்ப்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிக்க இயங்குகிறது. மூன்று தூண்கள் எங்களை வழிநடத்துகிறது. நல்வாழ்வு, அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நலனுக்காக வாதிடுவது. மாநகராட்சி, அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுன் இனனந்து அனைவரையும் அரவனைப்பது, சமநிலை, நீதி, கவுரவம் வழங்குவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஹாட்லைன்:+65 6341 5535


eap.png

பணியாளர் உதவித் திட்டம் என்பது தன்னார்வ, வேலை அடிப்படையிலான திட்டமாகும். இத்திட்டம், தனிப்பட்ட மற்றும் வேலையில் சிக்கல்கள் கொண்ட பணியாளருக்கு தனது சேவையை வழங்குகிறது. இதன் நன்மைகள் பற்றி மேலும் அறிய நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையை அணுகவும்.

flickr scott lewis.jpg