நான் ஒரு தலைவர்


பணியாளர்கள் மனநலம் காப்பதில் வணிகத் தலைவர்களுக்கு பெரும் பங்கு இருக்க வேண்டும் என்ற கருத்து வணிக தலைவர்களுக்கு மத்தியில் சாத்தியம் இல்லாத ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது. பணியாளர்களின் மனநலம் குறித்த விஷயங்கள் அவரவர் சொந்த விஷயங்கள் என்பதால் அவை அலுவலகத்துக்கு வெளியேவும், ஒரு மனநல நிபுணர் மூலமாகவும் மட்டுமே அணுகப்பட வேண்டும் என்பது தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், தற்கொலைகளை தடுப்பதில் யார் வேண்டுமானாலும் பங்கு எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, ஒரு நிறுவனத்தில்  தற்கொலை தடுப்பு முயற்சியில் வெற்றி பெறுவதற்கு தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக விளங்கும். தலைவர்களின் பேச்சு, அனுகுமுறை, செயல்கள் பணியாளர்களின் மனநலனுக்காவும் அவர்கள் பாதுகாப்பாக உணர்வதற்கும் முதன்மை காரணமாக இருக்கும். ஒரு அசாம்பாவிதம் நடப்பதற்கு முன்பே அதை தடுப்பதே தலைவர்களின் நோக்கமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் தலைவர்களின் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால், உடனே தலைவரை அணுகி உதவி கேட்பார்கள். இதை அறிந்த சக ஊழியர்களும் முன் வந்து, அந்த நபருக்கு உதவி அளிக்க முன் வரு.

பணியாளர்கள் தங்கள் மனநலனுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, உதவி புரியும் தலைவர்கள் மற்ற பணியாளர்களுக்கும் முன் மாதிரியாக இருக்கும் சுழ்நிலை உருவாகிறது.


பயனுள்ள தகவல்

உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவதோ தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுபாவம் இருந்தால் , மனநல சோதனை செய்து கொள்ள, CHAT ஐ தொடர்பு கொண்டு (mental health check) வல்லுனர்களின்  உதவி பெறுங்கள் அல்லது கீழ்கண்ட தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (எஸ்.ஓ.எஸ்) 1800-221-4444

  • டச்லைன்  1800-377-2252

  • சிங்கப்பூர் மனநல கூட்டமைப்பின் தொலைபேசி உதவி சேவை: 1800-783-7019

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மனநல பரிசோதனைக்கு, இங்கு முன் பதிவு செய்து கொள்ளவும்: https://www.chat.mentalhealth.sg/get-help/make-chat-referral/

மனநலப் பிரச்சனை உள்ள ஒருவருக்கு ஆதரவு அளிக்க உதவும் எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:  https://www.chat.mentalhealth.sg/get-the-facts/Practical-Tips/

சில்வர்ரிப்பன் (சிங்கப்பூர்), நேர்மறை மனநலம் நோக்கி: https://www.silverribbonsingapore.com/

எங்கள் சேவைகள்:

  • பேச்சுக்கள்/ பயிற்சிப்பட்டறைகள

  • ஆலோசனை

  • நடமாடும் சேவை

  • நெருக்கடி நிவர்த்தி செய்யும் குழு

இச்சமயத்தில் உணர்ச்சிகளுக்கான ஆதரவு சேவை இலவசமாக வலைதளவழி மூலம் கொடுக்கப்படும்

தேர்ந்த வல்லுனர்களின் ஏற்பாட்டிற்கு  தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

வேலை நேரம் : திங்கள்-வெள்ளி, காலை 9 மணி- மாலை 5 மணி வரை

+65 6385 3714
+65 6386 1928
+65 6509 0271

info@silerribbonsingapore.com

நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ உடனடி ஆபத்தில் இருந்தால் 24மணி நேர அவசர மருத்துவ சேவைக்கு 995ஐ அழைக்கவும் அல்லது அருகில் உள்ள அவசர சிகிச்சைமையத்தை அணுகவும்.

யாரிடம் உதவி நாடுவது என்று குழப்பமா? எஸ் ஓ எஸ்ஐ இன்றே அணுகுங்கள்: https://www.sos.org.sg/


சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவக்கூடிய தகவல்கள்

 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மையம்(எம்.டபிள்யு.சி):
நியாயமற்ற வேலை வாய்ப்பு நடைமுறைகளிலிருந்து தீர்வு பெற நாடி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஆலோசனை மற்றும் உதவியை அளிக்கிறது எம்.டபிள்யு.சி.

புலம் பெயர்ந்தவர்களை சமூகத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளவும் அவர்களை சமூகத்தில் ஒருங்கினைக்கவும், எம்.டபிள்யு.சி,சமூக நடவடிக்கைகள், சமூக ஈடுபாடு, அவர்கள் சார்பாக பரிந்துரைகள் வழங்குவது, பொது கல்வி ஆகியவற்றின் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கிடையில் சமூக ஒருங்கிணைப்பை மேப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் தளங்களையும் வழங்குகிறது.

எம்.டபிள்யு.சி 24 மணி நேர உதவி எண்: +65 6536 2692

ஹெல்த் செர்வ்:
சுகாதாரம் பேணுவதே ஹெல்த் செர்வின் உயிர் துடிப்பு ஆகும். கேலாங், ஜுராங் மற்றும் மண்டாய் ஆகிய இடங்களில் உள்ள ஹெல்த் செர்வின் மருத்துவமனைகள், முதலாளிகளிடமிருந்து சுகாதரம் சார்ந்த உதவிகள் கிடைக்காத காயப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை அளிக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலையின் போது ஏற்படுகின்ற காயம், அதற்கான இழப்பீடு, கோரிக்கைகள் மற்றும் சட்ட, குற்றவியல் அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்களுக்கான கேஸ்வொர்க் மற்றும் சட்ட ஆதரவை ஹெல்த்செர்வ் வழங்குகிறது. அவரது வழக்கின் நிச்சயமற்ற முடிவைச் சமாளிப்பதற்கான போராட்டங்களிலிருந்து பெரும் மன அழுத்தம் மற்றும் உணர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. 

ஹெல்த் செர்வ் ஹாட் லைன்: +65 3138 4443

ட்ரண்சியண்ட் வொர்க்கர்ஸ் கவுண்ட் 2 (TWC2):

டி.டபிள்யு.சி2 செய்யும் வேலையை இரண்டு விதமாக பிரிக்கலாம். வக்காலத்து மற்றும் நேரடி சேவைகள். பாதிக்கப்படக்கூடிய சமூகமாக உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான காரணிகள் மீது கவனம் கோருவதே வக்காலத்து ஆகும். இக்காரணிகள் சமூக நிலைமைகள், கட்டமைக்கப்பட்ட சட்டதிட்டங்கள் அல்லது பெருநிறுவனங்களின் முன்னுரிமைகள் ஆகியவற்றிலிருந்து உருவெடுக்கிறது. இங்கே மற்றும் இப்போது, தொழிலாளர்கள் சந்திக்கும் உடனடி பிரச்சனைகளுக்கு உதவி தேவைப்படுகிறது. டி.டபிள்யு.சி2 வின் நேரடி சேவைகள் இத்தகைய உதவியை அவர்களிடம் உள்ள வசதிகளை கொண்டு வழங்குகிறது.

ஹாட்லைன்:+65 6247 7001

இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு (HOME):

2004 ல் நிறுவப்பட்ட ஹோம் (இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பு)துஷ்ப்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிக்க இயங்குகிறது. மூன்று தூண்கள் எங்களை வழிநடத்துகிறது. நல்வாழ்வு, அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நலனுக்காக வாதிடுவது. மாநகராட்சி, அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுன் இனனந்து அனைவரையும் அரவனைப்பது, சமநிலை, நீதி, கவுரவம் வழங்குவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஹாட்லைன்:+65 6341 5535


ஆர்.கே.வீடியோ: தலைமைத்துவத்தின் நடவடிக்கை (ஆங்கிலத்தில்):

தலைவர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய பத்து கேள்விகள் (ஆங்கிலத்தில்):

மேலும் விவரங்களுக்கு,  தலைமைத்துவம்  பக்கத்தைபார்க்கவும்.

என்னிடத்தில் பணிபுரிந்த இரண்டு நபர்கள் அவர்களின் பிரச்சனைகளை யாரிடனேனும் பகிர்ந்து பேசியிருந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அதை எவ்வாறு அனுகுவது என்பது எனக்கு தெரியவில்லை.”
— மேற்பார்வையாள
flickr highways england.jpg
 

குறிப்பு:  எப்பொழுதும் தற்கொலை எண்ணங்கள் மற்றும் முயற்சிகளை முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக கவனிக்க வேண்டும். அவை ஒருவர் நிராதரவாக உதவி கோருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.