தாமஸ் ஜாய்னரின் தற்கொலைஆபத்து மாதிரி



தன்னுடைய ‘ஏன் தற்கொலை மூலம் இறந்து போகின்றார்கள்” (Why people Die by Suicide) (2006)  என்ற புத்தகத்தில், தாமஸ் ஜாய்னர் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வெளிவந்த தற்கொலை பற்றிய விவாதங்கள் மற்றும் தத்துவங்களை முன்னுரைத்திருக்கிறார். அவருடைய இன்டர்பர்சனல் சைகாலாஜிக்கல் தியரி ஆப் சூசைட், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களிடையே தற்கொலை அபாயத்தை மதிப்பிடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் அவர் உணர்த்தும் விவாதம் என்னவென்றால், தற்கொலை செய்து கொள்பவர்கள் இறந்து விட வேண்டும் என்ற விருப்பம் மட்டுமில்லாமல், தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வையும் இழந்து இருப்பார்கள் என்பதாகும். 

ஜாய்னரின் விவாதம்படி, இறந்து விடவேண்டும் என்ற உந்துதல், இரண்டு உளவியல் நிலைகளால் உண்டாகப்படுகிறது. ஒன்று தான் பிறருக்கு பாரமாக இருப்பதாக உள்ள உணர்வு, மற்றொன்று சமுதாயத்திலிருந்து துண்டிக்கபட்டது போன்ற ஒரு உணர்வு. முதல் நிலையான, பாரமாக இருப்பது போன்ற உணர்வில், உணர்வு என்ற வார்த்தை மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில், உலகம் ஒருவரை எவ்வாறு உணருகிறது என்பது முக்கியமில்லை. உலகத்தை பற்றின அவரின் உணர்வுதான் முக்கியமாக நோக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்றால், ‘என் குடும்பத்தினருக்கு நான் உயிரோடு இருப்பதை விட, இறந்து போவதே நல்லதாக அமையும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை தொலைந்தவர்களாக இருப்பர். இரண்டாவது நிலையான, சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வு, மனிதனின் அடிப்படை தேவையான சமுதாய உறவு உணர்வை சார்ந்ததாகும். சமுதாய உறவுகள் துண்டிக்கபடும் போதோ அல்லது முறிந்து போகும் போதோ நாம் தனிமையாக உணர்வோம். 


மேலே கூறிய இரண்டு நிலைகள் இருந்தும் கூட, ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக இல்லாமல் போகலாம். ஆனால் இந்த நிலைகளின் உடன், அவர்களிடம் செய்து முடிக்கும் திறன் (அல்லது அஞ்சாமை) இருந்தால், அது அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும் மனிதனுக்கு, பிறப்பிலிருந்தே தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற இயற்கையான உள்ளுணர்வு உண்டு. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் துயரமான மற்றும் சினம் தூண்டும் அனுபவங்கள் நாளடைவில் அவரை துயரத்தின் வலியையும், இறப்பின் பயத்தையும் தாண்டி செல்லவைக்கிறது என்பது ஜாய்னரின் விவாதம். ஒருவரின் தற்கொலை முயற்சி அனுபவங்கள் அவரை மீண்டும் முயற்ச்சி செய்யக்கூடும் வாய்ப்பை அதிகரிக்கும். ஜாய்னரின் தற்கொலை அபாயம் மாதிரி (மாடல்) என்ன விளக்குகிறது என்றால், ஒருவருக்கு வாழ்க்கையில் துயரமான மற்றும் சினம் மூட்டும் அனுபவங்களும் அல்லது இறப்பை பற்றிய பயம் இல்லாமல் போன நிலையிருந்தும் கூட, அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது உறுதிலாகாது. எப்போது தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் என்ற விருப்பம், முடிக்கக் கூடிய திறன் இருந்தால் மட்டும் அது நடக்கும்.