கட்டமைப்பு



“தலைப்பகுதி, நடுப்பகுதி, கடைப்பகுதி”

தற்கொலைகளை முனைப்புடன் தடுப்பதற்கான ஆலோசனைகள்

தற்கொலைகளின் விகிதம் கணிசமாகக் குறைவதற்கு, ஒருங்கிணைந்த தொடர் முயற்சிகள் மிகவும் முக்கியம் என்பதோடு, அந்த ஒட்டுமொத்த உத்தியில், பயிற்சி என்பது ஒரு கூறுதான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது (நோக்ஸ், இதரர், 2003). பொதுச் சுகாதாரப் பார்வையில் இருந்து ஒருங்கிணைந்த அணுகுமுறை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தற்கொலைகளைத் தடுப்பதற்கு, ‘தலைப்பகுதி, நடுப்பகுதி, கடைப்பகுதி” அணுகுமுறை தேவைப்படுகிறது.

அருவியின் கதை

நீங்கள் ஓர் அருவியின் அருகே நடந்துசெல்கிறீர்கள். அப்போது, அருவியில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவரது கூக்குரல் கேட்கிறது. முதலில் லேசாகத் தயக்கம் காட்டினாலும், அவரைக் காப்பாற்றுவதற்கு அருவியில் குதித்தவுடன் உற்சாகம் அடைந்துவிடுகிறீர்கள். உங்கள் சக்தி அனைத்தையும் திரட்டி அந்த மனிதரைக் கரைக்கு இழுத்து வந்து, அவருக்கு இதய இயக்க மீட்பு உதவி செய்கிறீர்கள். அவருக்குச் சுயநினைவு திரும்புவதைப் பார்த்து, உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கிறது. மீண்டும் உங்கள் பாதையில் நடக்கத் தொடங்கலாம் என்று நினைக்கும்போது, அருவியில் இன்னொரு அபயக் குரல். ஆச்சரியமாக இருக்கிறது! உடனே அருவியில் குதித்து, அங்கே தத்தளித்துக்கொண்டு இருந்த பெண்ணைக் காப்பாற்றி, அவருக்கும் இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்கிறீர்கள். இன்று ஒரே நாளில் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய ஆச்சரியத்தில் மூழ்கியுள்ள நீங்கள், நெற்றிவியர்வையைத் துடைத்துக்கொள்கிறீர்கள். திரும்பி நடக்கலாம் என்று நினைக்கும்போது, அருவியில் மூழ்கிப் போன ஏராளமானவர்கள் வருவதைப் பார்க்கிறார்கள். 

உடனே, பக்கத்தில் உள்ளவர்களை எல்லாம் உதவிக்கு அழைக்கிறீர்கள். இப்போது உங்களோடு ஏராளமானோர் உதவி செய்ய வந்துவிட்டார்கள். அவர்கள் அருவியில் மூழ்கிப் போனவர்களையெல்லாம் இழுத்து வெளியே போடுகிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், வேகமாக மூழ்கியவர்கள் அருகே போய், எதிர்நீச்சல் போடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க முயற்சி செய்கிறார். இது ஒருசிலருக்கு உதவுகிறது. ஆனால், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது, பலரால் எதிர்நீச்சல் போடுவது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போது எல்லோரும் ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். எப்போது இந்தப் பிரச்னை தீரப்போகிறது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இறுதியாக, நீங்கள், அருவியின் தலைப்பகுதியை நோக்கி ஓடத் தொடங்குகிறீர்கள். இதைப் பார்த்த இன்னொரு உதவியாளர், உங்களைப் பார்த்து கத்துகிறார், “எங்கே போகிறீர்கள்? இங்கே ஏராளமானோர் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்களைக் காப்பாற்ற அனைவரது உதவியும் தேவை!” அதற்கு நீங்கள், “நான் அருவியின் தலைப்பகுதிக்குப் போகிறேன். யார் இந்த நபர்களையெல்லாம் அருவியில் பிடித்துத் தள்ளுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளப் போகிறேன்.” என்று சொல்கிறீர்கள்.

தலைப்பகுதி உத்திகள் என்பவை, நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், களங்கம் ஏற்படுத்தும் மொழி மற்றும் செயற்பாடுகளைத் தவிர்த்தல், வாழ்க்கைக் கல்வி மற்றும் மனத் திட்பம் மூலம் தாங்கும் சக்தியை வலுவேற்றுதல், மனநல ஆரோக்கிய கல்வியை மேம்படுத்துதல் ஆகிய ஆபத்தைத் தவிர்க்கும் உத்திகளை வளர்த்தெடுப்பவையாகும்.

rk workers round.png

நடுப்பகுதி உத்திகள் என்பவை, பிரச்னைகள் அரும்பத் தொடங்கும் காலத்திலேயே இனங்கண்டு, அவர்களை சரியான சகிச்சைமுறைகளில் ஈடுபடுத்துவதாகும். அவரது பிரச்னைகள், தற்கொலை எண்ணமாக மாறுவதற்கு முன்னர் இதனைச் செய்யவேண்டும். மனநல பாதிப்புகள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளனவா என்பதற்காக சோதித்துப் பார்த்தல், பல்வேறு விதங்களில் உதவிகோரும் நடத்தையை வளர்தெடுத்தல், இயல்பாக்குதல்; தற்கொலையை மையப்படுத்தும் உரையாடல்களை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கான பயிற்சியை வெகுமக்களுக்கு வழங்குவது ஆகியவையே நடுப்பகுதி உத்திகளாகும்.

கடுமையான தற்கொலை எண்ணமோ, தற்கொலை முயற்சிகளோ, அல்லது தற்கொலை மரணமோ நிகழ்ந்துவிட்டால், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதுதான் கடைப்பகுதி உத்திகளாகும். கடைப்பகுதி உத்திகளில் சமீபத்திய சிந்தனைகள் மாற்றம் அடைந்துள்ளன. அவர்களைக் கட்டுப்படுத்தும் (எடு. வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தல், கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல்) எதையும் செய்வதைவிட, இச்சூழல் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முயற்சி செய்யவேண்டும். அதாவது, “இந்தப் பிரச்னைகளில், பயத்துக்கு மாற்றாக, கெளரவமும் ஆற்றலும் வழங்குவதற்கான அணுகுமுறை என்ன?” என்று யோசிக்கலாம்.


தலைப்பகுதி

ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்தல்

நடுப்பகுதி

ஆரம்பநிலையிலேயே பிரச்னைகளைக் கண்டுபிடித்து, தேவைப்படும் சிகிச்சை உதவிகளை வழங்குக

கடைப்பகுதி

மனநல பாதிப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பான, அன்புநிறைந்த எதிர்வினைகள்




வேலைத்தல கலாசாரத்தை மாற்றும் அணுகுமுறை:
மனநல ஆரோக்கியத்துக்கும் தற்கொலைத் தடுப்பு முறைக்கும் பாதுகாப்பு முன்னுரிமை கொடுங்கள். இதற்கான மாதிரிகளை தலைமை உருவாக்கி, அதனை அதன் பலன்களைத் தெளிவாக விளக்கி, கேள்விகளுக்கான பதில்களையும் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக, மனநல பயிற்சிகளையும் பல்வேறு வளங்களையும் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புதிய பணியாளர்களுக்கான பயிற்சிகள், பலன்களை புதுப்பித்தல், செய்திமடல்கள் ஆகியவை.

வாழ்க்கைப் பாடங்களை உருவாக்குதல்: மோதலைத் தீர்த்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல், தொடர்புத் திறன், பொருளாதாரத் திட்டமிடல், இலக்குகளை நிர்ணயித்தல், குழந்தைகளை வளர்த்தல், திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகளை, பணியாளர்களுக்காக உருவாக்குங்கள்.

மனநலம் மற்றும் போதைகள் பற்றிய விழிப்புணர்வு:
தொடர்ச்சியாக, மனநல தொடர்பான தலைப்புகளிலும் நல்வாழ்வை மேம்படுத்துவது எப்படி என்றும் உரைகளை வழங்குங்கள். மனநலத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்புத் திட்டங்களையும் தொடர்ச்சியாக தொடர்புபடுத்தியபடி இருங்கள்.

சமூக குழுக்களை உருவாக்குங்கள்: ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி, அதன் மூலம், வேலைத்தல உதவிகளை உண்மையாகவே வழங்குங்கள்.

பாதிப்படையக் கூடியவர்களைக் கண்டுபிடி:
மன அழுத்தம், துயரம், போதைப் பழக்கம், கோபம் ஆகியவற்றின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே இனங்காணுங்கள்.

உதவிகோருவதை ஊக்குவியுங்கள்:
சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் தற்கொலை தடுப்பு உதவி ஹாட்லைன் எண் 1800-221-4444ஐ பிரபலப்படுத்துங்கள். சகாக்களிடம் இருந்து உதவி பெறும் பயிற்சியையும் உதவிகோரும் நடத்தையையும் ஊக்குவியுங்கள்.

தரமான சிகிச்சைக்கான வாய்ப்பை அதிகப்படுத்துங்கள்:
சகாயமான மனநல ஆலோசனை சேவைகளைப் பெற வாய்ப்பளியுங்கள். அதேபோல், தற்கொலையைக் கண்டுபிடிக்கும் மதிப்பீடுகள், அதை நிர்வகித்தல், உதவி செய்தல் மற்றும் தரமான மருத்துவ சிகிச்சை வாய்ப்புகளையும் வழங்குங்கள்.


எவராலும் எவருக்கேனும் உதவமுடியும். நீங்கள் எப்படி ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.


மனநல சேவைகளைப் பெற பணியாளர்களுக்கு ஊக்கம்:
பணியாளர்கள் பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, மேலாளர்கள், அவர்களை, உடனடியாக மனநல மற்றும் பிரச்னைகளைச் சமாளிக்கும் சேவைகளை வழங்குவோரோடு தொடர்புபடுத்த முயற்சி எடுக்கலாம்.

கொலைக்கருவிகளை தடுத்திடுங்கள்:
தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்போது, அவர்களுக்கு துப்பாக்கிகளோ, மாத்திரைகளோ, வேறு தற்கொலைக் கருவிகளோ கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

தற்கொலைக்குப் பிறகு உதவி அளித்திடுங்கள்:
இடர் மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். தற்கொலை நடந்துவிட்டால்,  ”வேலைத்தலத்தில் தற்கொலைக்குப் பிறகு என்ன செய்யவேண்டும் என்பதற்கான மேலாளர்களுக்கான கையேட்டில்’ குறிப்பிட்டுள்ளபடி நடந்துகொள்ளுங்கள்.