லட்சியமும் அதற்கான செயல்பாடும்
லட்சியம்
பணியிலும்அதைத் தாண்டியும்பாதிக்கும் தற்கொலையின் கொடூரமான தாக்கம் முழுமையாக நீக்கப்பட்ட பணி இடங்கள் நிறைந்த ஒரு சமூகத்தை அமைப்பதே எங்கள் லட்சியமாகும்.
செயல்பாடு
தற்கொலைத்தடுப்பு பற்றின பேச்சு வார்த்தையை தளம் உயர்த்தி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் அதை முன்னுரிமை ஆக்கி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிங் மைண்ட்ஸ் மூன்று வியூகங்கள் கொண்டு பணி இடச்சமூகத்தை இதில் ஈடுபடுத்த விழைகிறது.
விரிவான தற்கொலைத்தடுப்பு, அதற்கான தலையீட்டுச் செயல்பாடுகள், தற்கொலையினால் துக்கம் அடைந்தவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை (குறைபாடுகள்) பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் வடிவமைத்த வியூகங்களைக் கொண்ட வழிகாட்டுதல் அளித்தல்.
உலகத்தரமான பயிற்சியும், விளக்கக்காட்சிகளும் ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் தற்கொலைத்தடுப்பு, மனநலமுன்னேற்றம் மற்றும் வேலையில் மீள்திறன் ஆகியவற்றில் திறனறிவு, தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அதிகரித்தல்.
மிகுந்தபயனுள்ள, பாதுகாப்பான, பேச்சுத் தொடர்பு மற்றும் தலைமையின் ஈடுபாட்டால், கட்டுமானத்துறைக்கென்று இருக்கும் கலாச்சார பழக்கங்களையும் எண்ணவோட்டத்தையும் மாற்றி, பூஜ்யம் தற்கொலை என்ற நிலையை விழையும் மனநிலையை உருவாக்குதல்