பயிற்சியாளர் மரு. சாலி ஸ்பென்ஸர் – தாமஸ் பற்றிய குறிப்பு
பயிற்சியாளர் மரு. சாலி ஸ்பென்ஸர் – தாமஸ் பற்றிய குறிப்பு
சாலி ஸ்பன்ஸர் தாமஸ் ஒரு மருத்துவ உளவியலாளர். மேலும் இவர் பல நாடுகளில் தூண்டுதல் ஏற்படுத்தும் பேச்சாளர் மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் தொழில்முனைவர். டென்வரில் தொழில்முனைவராக இருந்த அவரது தம்பி, பைபோலார் டிஸ்சாடர் பாதிப்புடன் கடினமாகப் போராடி, இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுவே மரு. ஸ்பன்ஸர் தாமஸ் தற்கொலைத்தடுப்புப் பணியில் ஈடுபட காரணமாகியது.சமூக மாற்றத்திற்கான ஒரு முன்னோடி என்று தேசிய அளவில் மட்டுமின்றி, பன்னாட்டு அளவிலும் அறியப்படும் இவர் மனநலத்துறையில் உள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியாக, பல்வேறு பெரிய அளவிலான திட்டங்களை ஆரம்பிக்க உதவியுள்ளார்.இதில் விருது வாங்கிய மேன் தெரபி என்ற திட்டமும், கட்டுமானத்துறைக்கான நாட்டின் முதல் தற்கொலைத்தடுப்புத் திட்டமான கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிங் மைண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
ஆஸ்த்ரேலியாவில் மேட்ஸ் இன் கன்ஸ்ட்ரக்ஷனின் வருடாந்திர மனநல மாநாட்டில் முக்கிய பேச்சாளர், சி.எஃப்.எம்.ஏ. அமைப்பின், தற்கொலைத் தடுப்பிற்கான கட்டுமானத்துறையின் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆலோசகர் முக்கிய பேச்சாளர், ஸ்மார்ட்/எஸ்.எம்.ஏ.சி.என்.ஏ மெம்பர் அசிஸ்டென்ஸ் ப்ரோக்ராமின் பயிற்சியாளர் மற்றும் முக்கிய பேச்சாளர் மற்றும் பல துறைசார்ந்த நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.2016ல்,எய்.ஆர்.எம்.எய் வழங்கிய ஹொரைசான் விருதினை, தற்கொலைத் தடுப்பிற்கான தேசிய செயல் கூட்டமைப்பின், பணி இடத்திற்கான சிறப்பு பணிப்பிரிவு சார்பாக நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்.
2016ல் வெள்ளை மாளிகைக்கு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் ஆண்கள் மனநலம் பற்றி பேசினார். அவரது சமீபத்திய டெட்எக்ஸ் பேச்சுகளில்,
பள்ளிகள், பணிஇடங்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில்மனநல மேம்பாடும், தற்கொலைத்தடுப்பும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், அதற்கு வழிசெய்யும் வகையில் மனநலம் பற்றிய உரையாடல்களை மேம்படுத்த வேண்டும் என்ற அவரது லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டார்.