உங்கள் நிறுவனம் எந்தளவுக்குத் தயாராக உள்ளது?

உங்கள் பணியிடத்தில் இந்தக் குணங்கள் பெரும்பாலும் உண்மையாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவும். இவற்றில் எதேனும் ஒன்றுக்கு பதில் ஆம் என்று இருந்தால் கூட நீங்களும், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆபத்தை குறைக்க என்ன செய்ய முடியும்?

flickr alan levine.jpg

தொழிலாளர்களின் பண்புகள்:

ஆண் பணியாளர்கள் அதிகமுள்ள பணியிடம்

ஆண்மையும் அச்சமற்றதன்மையும் : இவர்கள் தங்களிடம் எந்தச் சிறு “குறைபாடும்” இருக்கிறது என்பதைக் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களாகவே முன்வந்து உதவியும் கோரமாட்டார்கள்.

மது அல்லது போதைப் பொருட்கள் மூலம் சுய மருத்துவம்

நகரும் / தாற்காலிக பணியாளர்கள்: பணியாளர்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்தாலோ, அல்லது காலத்துக்கேற்ப பல்வேறு தாற்காலிக பணிகளைச் செய்துகொண்டிருந்தாலோ, அவர்களிடம் சமுதாய உணர்வு இருக்காது, தனிமை உணர்வே அதிகமிருக்கும்.

தூக்கத்தில் பாதிப்பு: நீண்ட நேரமோ அல்லது நேரமற்ற நேரத்தில் பணியாற்றுவதோ, தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம், மன மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம்.

தீவிர வலி: பணியாளர்கள், உடல் ரீதியான காயம் அல்லது தீராத வலி காரணமாக, மனச்சோர்வையும் நம்பிக்கையின்மையை அடையக்கூடும். இதைவிட்டு தப்பித்துச் செல்ல, தற்கொலையை நாடவும் கூடும்.

கண்டுபிடிக்கப்படாத, சிகிச்சை அளிக்கப்படாத மனநில குறைபாடுகள்: மனநலக் குறைபாடுகளை முறையாக பரிசோதித்து, அதற்குச் சிகிக்கை பெறுபவதற்கு ஏராளமான தடைகள் உள்ளன. மனநல பாதிப்பு உடையவர் என்ற களங்கம் ஏற்பட்டுவிடலாம். போதுமான மருத்துவ வசதி கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். தூக்கமின்மை மற்றும் எரிச்சல் போன்றவை உள்ளுக்குள் இருக்கும் மனநல பாதிப்புகளின் அறிகுறிகள் என்பதைப் பலரும் அறிவதில்லை. இதனால், இந்த அறிகுறிகள் இருந்தாலும், அவை முழுமையாக கவனிக்கப்படுவதில்லை.

தரமான மனநல சிகிச்சை கிடைப்பதில் குறைபாடு: கட்டுமானத் துறையில் ஏராளமானோர் தாற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பதனால், அவர்களுக்கு, மனநல பாதிப்புகளின் போதோ, போதைப் பழக்கத்தின் போது போதுமான காப்பீட்டு வசதி கிடைப்பதில்லை.

திருமண முறிவுகள், குடும்ப பிரச்னைகள்: குடும்பத்தில் உள்ள தகராறுகள், பணித் திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் உழைப்பதும், போதைப் பழக்கமும், விவாகரத்துக்கும் குடும்பத் தகராறுக்கும் வழிவகுக்கும்.

பொருளாதார பாதிப்பு: கடனும், தொடர்ச்சியாக வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன்மூலம், மன அழுத்தத்துக்கும் ஸ்திரமற்றதன்மைக்கு வழிவகுக்கலாம்.

கொலைக் கருவிகளுக்கு வாய்ப்பு (கட்டுமான தலங்கள் போன்றவை)

அவமானம்: பணியாளருக்கு அவரது வேலையே மிகமுக்கியமான அடையாளத்தை வழங்குகிறது. அப்படிப்பட்ட வேலையில் மோசமான தவறு ஒன்று நேரும்போது, அது தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடலாம்.

சிக்கிக்கொள்ளுதல்: தங்கள் இலக்குகளை அடைவதற்கு வேறு வழியே தெரியாததால், ஒருசில பணியாளர்கள், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தவறைச் செய்ய முனைந்துவிடலாம்.

தற்கொலை மரணங்கள் அதிகமிருக்கும் பணியிடங்கள்: பாலங்கள், கட்டடங்கள் போன்ற கட்டுமான இடங்களில், தற்கொலை மரணங்கள் அதிகம் இருக்கலாம்.

பணியிடத்தின் கலாசாரம்:

❏ நிறுவனம், தொழிலாளர்களின் நலனில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

❏ செய்திகளைப் பரிமாறிக்கொள்வதில் வெளிப்படைத் தன்மையோ, ஆதரவோ இல்லை.

❏ பணியிடத்தில் சமுதாயம் சார்ந்த தற்கொலை மரணங்கள் உண்டு.

❏ மனநல பாதிப்பு பற்றிய களங்கள் உண்டு.

❏ “பிரஷர் குக்கர் போன்ற மன அழுத்தம்” இங்கே சகஜம்.

❏ இதர உடல்நலப் பிரச்னைகளுக்கு வழங்கப்படுவது போன்றே மனநல பிரச்னைகளுக்கும் சரியான சிகிச்சை வசதிகள் வழங்கப்படுவதில்லை.

❏ பொதுவான மனநலம் ஆரோக்கிய வளங்கள் தொடர்பான செய்திகள் பணியிடத்தில் தெரியாது.

❏ பணியிடத்தில், பணியாளர் உதவித் திட்டம் இல்லை அல்லது, அது பணியாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுவதில்லை.


தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் மறைவாக இருக்கக்கூடாது.


❏ மனநல ஆரோக்கியம் தொடர்பான தலைப்புகளில் தொடர்சியான விழிப்புணர்வு வகுப்புகள் பணியிடத்தில் வழங்கப்படுவதில்லை.

❏ பணியிடத்தில் மனநல ஆரோக்கியம் தொடர்பான கையேடுகள் / சுவரொட்டிகள் / தகவல் படிவங்கள் வழங்கப்படுவதில்லை.

❏ மன அழுத்தம், வருத்தம், போதைப் பழக்கம் போன்ற மனநல பாதிப்புகளுக்களைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் பணியிடத்தில் செய்யப்படுவதில்லை.

❏ தற்கொலை பாதிப்பை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான நிலையான நடைமுறைக் கையேடு, பணியிடத்தில் இல்லை.

நண்பர் அமைப்பு என்பது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டஓர்அமைப்பாகும். ‘ நீபத்திரமாக இருக்கத் தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டாயா?’ என்று நாங்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வோம். புதிதாக வரும் நபர்கள், அங்கிருக்கும் நடைமுறைகளில் ஏதேனும் தவறுகளை கண்டால் அதை வெளிப்படுத்த இந்த நண்பர்கள் அமைப்பு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், இது என்றுமே “ நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்?” என்பது போன்ற விசாரிப்புகள் கொண்ட உரையாடல்களை நோக்கி நகர்ந்ததில்லை.”
— களமேலாளர்