கட்டுமானத்துறையின் ஆபத்து



man lady plans round.png

பிரச்சனை:

கட்டுமானத்தொழில்துறையில்   தற்கொலைக்கான  ஆபத்து அதிகமாக உள்ளது.

நாடும், இத்துறையும்  தற்கொலைத் தடுப்பை பிரதானமானதாக நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்  இதோ:

சிங்கப்பூரின் புள்ளிவிவரம் மற்றும் போக்கு:

  • ஒரு வருடத்தில் சராசரியாக 405 தற்கொலைகள், ஒரு நாளில் ஒரு தற்கொலையால் நிகழும் மரணம் (ஐசிஏ)

  • வெளிப்புற காரணங்களால் நடக்கும் பாதிக்கும் மேற்பட்ட இறப்புக்கு தற்கொலையே காரணமாய் அமைகிறது. (ஐசிஏ)

  • மோட்டார் வண்டி மோதி இறப்படதை காட்டிலும் நிறைய பேர் தற்கொலையால் இறக்கிறார்கள் (ஐசிஏ)

  • உயர் திறன் உள்ளவர்கள் மற்றும் உயர் திறன்வேலைகள் செய்யும் ஆண்கள்(அதிக பளுவுள்ள கட்டுமான கருவிகள் செய்யும் இடத்தில் சூப்பர்வைசர் பணியில் உள்ளவர்கள்) கிட்டத்தட்ட 1.5 முறை தற்கொலையால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் (பிஸினஸ் இன்சைடர்)[1][2]

  • உயர்நிலை பள்ளிப்படிப்பு மட்டுமே போதும் என்கிற வேலையில் உள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்வதற்கான அபாய சூழலில் உள்ளார்கள் (34 அறிவியல் ஆய்வுகளின் திறனாய்வு)

நம்மிடையே கடினமான சுபாவம் உடையவராக இருப்பது அவசியம் என்ற மனநிலை உள்ளது. அதனால் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொண்டும், சகித்துக்கொண்டும் கடந்து செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருடைய தனிப்பட்ட விசயங்களைப் பற்றி வெளிப்படையாக, பணி இடத்தில் பேசுவது பற்றி நினைப்பதே கடினமான விசயமாகும். அவ்வாறு செய்தால் அலட்சியத்தை தான் அதற்கு பதிலாகப் பெற முடியும். தனிப்பட்ட , சொந்த விவகாரங்களைப் பற்றி பிறரிடம் கலந்து பேசுவது என்பதில் தவறு ஒன்றும் இல்லை, அது சரிதான் என்று செயல்பாட்டு ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
— வர்த்தக மேற்பார்வையாளர்

லட்சியம்:  பூஜ்யம் தற்கொலை

பாதுகாப்பு என்ற விசயத்தைக் கடைபிடிப்பதை தீவிரமாக பழக்கத்தில் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், பணியிடம் சார்ந்த உயிரிழப்பு என்பது நடைபெறவே கூடாது என்பதை, லட்சியமாகக் கொள்வர்.  இதில் தற்கொலையும் அடங்கும், அது விதிவிலக்கல்ல.

கட்டுமானத்துறையின் தலைவர்கள்,தற்கொலை என்பதை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று முழுமையாக நம்பி, அதைத் தடுக்க தங்கள் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்தார்கள் என்றால் என்ன நடக்கும்.?

தலைமையும் முன் உதாரணங்களும் முக்கியம்!

தற்கொலைகளே இல்லாத நிலை ( பூஜ்யம் தற்கொலை) நிஜத்தில் சாத்தியமாகத் தேவையான கொள்கைகளையும் நடைமுறைகளையும் நாம் கட்டமைப்பதற்கு, கட்டுமானத்துறையின் வரைபடம் நமக்கு உதவுகிறது. யாருமே தனிமையிலும், விரக்தியிலும் இறக்கக் கூடாது.

எல்லா உயிர்களும் காக்க உகந்தவையே!

கட்டுமானத்துறையின் புள்ளியியல் விவரங்கள்:

  • 2019 ல் தற்கொலையால் நிகழும்  3 மரணத்தில் 2 பேர் ஆண்கள் ஆவர்

தொழில் சார்ந்த ஆபத்து காரணிகள்:

ஆபத்தான விசயங்களை கையாளக்கூடிய நிலை:  மாத்திரைகள், உயரமான இடங்கள் போன்ற ஆபத்தான வழிவகைகளை எளிதில் நாடக்கூடிய மக்கள், பயப்படக்கூடியவர்கள் அல்ல. மற்றும் அவர்கள் இவ்வழிவகைகள் மூலம் தன்னைத்தானே துன்பறுத்திக்கொள்ளக் கூடியவர்கள் ஆவார்கள். துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை மிகவும் கடினமான சட்டமாக கொண்ட நாடு சிங்கப்பூர் ஆகும். ஆயுத குற்றச்சட்டத்தின் பிரிவில் சட்டத்திற்கு புரம்பாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் சிறையில் அடைத்து தண்டிக்கப்படுவார்கள்.

மேற்கோள்கள் (ஆங்கிலத்தில்): https://www.ica.gov.sg/docs/default-source/ica/stats/annual-bd-statistics/stats_2019_annual_rbd_report.pdf

அச்சமின்மைக்கான திறன்: ஒரு பணியிடத்தில், துணிச்சல், பொறுப்பற்றத்தனம், அலட்சியம் ஆகியவை மிகுந்து முரட்டுத்தனத்திற்கு வெகுமதி அளிக்கும் சூழல் இருந்தால், அங்கு உள்ளவர்கள் தாமாக முன் வந்து உதவி கேட்க மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது.

உடல் அயர்ச்சி மற்றும் உள அதிர்ச்சிக்கு உள்ளாக்குதல்:  பணி இடத்தில், அதிர்ச்சிகரமான, உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை சந்திப்பதன் மூலம் உடல் மற்றும் உளநல பாதிப்புகளுக்கு உள்ளாகும் தொழிலாளிகள், நாள்பட்ட வலிகள், அதிச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பு, அதீத மன அயர்ச்சி போன்ற தொந்தரவுகளை அனுபவிக்க நேரும். இத்தொந்தரவுகள் தற்கொலை பற்றின சிந்தனை எழுவதற்கு காரணமாகலாம்.

போதைப்பழக்க கலாச்சாரம்.: மன அழுத்தத்தைத்தணிக்க தாமாகவே ஏதேனும் ஒரு மருந்து உட்கொள்ளும் பழக்கத்தைமறைமுகமாக ஆதரிக்கும் பணி இடங்கள்,  போதைப்பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மிக அதிகமாக சந்திக்க நேரிடும். இது தற்கொலை அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.

சிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட சமூகம்/ தனிமைநிலை: கால நிலைக்கு ஏற்ப மாறும் நிலையில்லாத பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்,  மனதளவில் ஒட்டுதல் இன்றி,  நிலையற்றதன்மையை அதிகமாக உணருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வு அர்த்தமற்று இருப்பதாக, தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாக நினைக்கிறார்கள்.

அவமானம் / வெட்கம் :  ஒரு தொழிலாளிக்கு அவரது பணி மட்டுமே அவருக்கான முக்கிய அடையாளமாக இருக்கும்போது, அப்பணியில் ஒரு தோல்வியோ, அவமானமோ ஏற்பட்டால், அச்சம்பவம் மனச்சோர்வையோ, தற்கொலை எண்ணத்தையோ தூண்டும்.

சிக்குண்ட நிலை: தங்கள் லட்சியத்தை அடைய வேறு வழியின்றி,  வழக்கத்திற்கு மாறான ஒன்றை செய்யும் கட்டாயம் ஏற்படும்போது, பணியாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது.  இத்துறையில் உள்ள பணியாளர்கள் சில சமயம்  தங்கவிலங்கு பூட்டப்பட்டது போல் உணருகிறார்கள். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழும் வாழ்க்கையின் தரத்தை நிலைநிறுத்திக்கொள்ள, மிகுந்த அயர்ச்சி ஏற்படுத்தும் ஒரேவிதமான பணியில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லாமல் சிக்கிக்கொண்டதாக உணர்கிறார்கள்.

சமுதாயத்தில் நிகழும் தற்கொலைகளில் பணி இடங்கள் சம்பந்தப்படுதல்: பாலங்கள், கட்டிடங்கள் போன்ற கட்டுமானப்பணி இடங்கள், சிலசமயங்களில், தற்கொலைகள் நடைபெறும் களங்களாகின்றன. சமூகத்தில் நடைபெறும் இது போன்ற தற்கொலைகள், அந்த இடத்தில் பணி புரியும் தொழிலாளிக்கு மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் தூண்டிவிடும் வாய்ப்பு உள்ளது.

வேலையின் தன்மை:தொடர்ச்சியான வேலையின்றி, இடையிடையே பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்படும் சுழற்சி முறையிலான பணிநிலை, வேலை பற்றின உத்திரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. தொழில் திறமை மற்றும் பணியாட்களின் தட்டுப்பாடு, பணியில் இருப்பவர்களின் பணிச்சுமையை வெகுவாக அதிகரிக்கிறது. இந்த நிலை, சமையலில் உதவும் குக்கரில் ஏற்படுவது போல் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி பணியாளர்களைத் திணறச் செய்யும்.

தூக்கத்தில் இடைஞ்சல்: நீண்ட பணிநேரம், இயல்புக்கு மாறான வேலைநேரம், போன்றவை தூக்கத்தை பாதித்து உடல் மற்றும் மன அயற்சி ஏற்படுத்தும். இது வேலைத்திறனை பாதிப்பதோடு, விபத்துக்கள் / காயங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. அதோடு, இது மனநல பிரச்சனைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

ஆண்கள் தற்கொலையில், கட்டுமானம்/பிரித்தெடுத்தல் துறையே முதலிடம் வகிப்பதாக சி.டி.சி நிறுவனம் கணித்துள்ளது. மேலும் தற்கொலையால் இறக்கும் ஆண்களில் 20% பேர் கட்டுமானம்/பிரித்தெடுத்தல் துறையில் இருப்பவர்களே என்றும் கூறுகிறது.