முக்கிய கருத்துரைகள்



மனநல பாதிப்புகளை எளிமையாகத் தீர்த்துவிடமுடியாது: கட்டுமானத் துறையில், தற்கொலைத் தடுப்பும் மனநல ஆரோக்கியமும் - பாதுகாப்பில் புதிய அணுகுமுறைசாலி ஸ்பென்சர் - தாமஸ், மனநல மருத்துவர்

சாலி ஸ்பென்சர்-தாமஸ், சை.டி.டி.

flickr marc falardeau-2.jpg

கண்ணோட்டம்: பாதுகாப்பு நிர்வாகத்தை தனது அடிப்படை பண்பாகவும் நடைமுறையாகவும் வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறது கட்டுமானத் துறை. இதன்மூலம், ஒரு விபத்தும், காயமும் ஏற்படக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். ஆனால், தற்கொலைகள் அதிகம் நடைபெறக்கூடிய முதல் பத்து துறைகளில் தொடர்ச்சியாக கட்டுமானத் துறையும் இடம்பெற்று வருகிறது. சமீபத்தில் நடத்தை ரீதியான பாதுகாப்பு அணுகுமுறைகள் பற்றிய பார்வைகள் மாற்றமடைந்து வருகின்றன. இதன்மூலம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வரையறைகளை, தொழில் முதலாளிகள் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான கட்டுமானத் துறையின் முயற்சிகள், பாதுகாப்புத் துறையில் புதிய வாசல்களைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.

தற்கொலை செய்துகொண்டு மரணமடையும் பணியாளர்களை இழந்து பல தொழில்முதலாளிகள் தவிக்க வேண்டியுள்ளது. மனநல பாதிப்புகளும் தற்கொலை எண்ணங்களும் வெளியுலகுக்குத் தெரியாது என்பதால், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. எங்களது கருத்துரைகள், கட்டுமானத் துறை முதலாளிகளுக்குப் பெருமளவு உதவுவதோடு, பல்வேறு உயிர்களைக் காப்பதற்குத் தேவைப்படும் நீண்டகால ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு நாங்கள் உதவிசெய்வோம்.

அறிவியல், கதைகள், கொஞ்சம் நகைச்சுவையோடும், டாக்டர் ஸ்பென்சர்-தாமஸ், பங்கேற்பாளர்களைக் கவர்வதோடு, அவர்கள் தங்கள் நிறுவனங்களை மனநல ஆரோக்கியத்தோடும் பாதுகாப்போடும் நடத்திச் செல்வதற்கு தைரியமும் ஊட்டுவார்.

இலக்கு : தற்கொலை தடுப்பு, தலையீடு மற்றும் பிரச்னைக்கான எதிர்வினை ஆகியவற்றில் பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் திறன்களையும் வளர்ப்பதே குறிக்கோள்.

குறிக்கோள்கள்: இந்தக் கருத்துரை முடிவதற்குள், பங்கேற்பாளர்களால்:

  1. அமெரிக்காவில் உள்ளோரிடையே தற்கொலை பற்றிய பொருத்தமான தகவல்களைத் தெரிவிப்பார்கள்.

  2. கட்டுமானத் துறையில் தற்கொலைகள் ஏன் அதிகம் நிகழ்கின்றன என்பதை விவரிப்பார்கள்.

  3. தற்கொலை தடுப்பு மற்றும் பிரச்னைக்கான எதிர்வினையாக ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை உருவாக்க, மூன்று முக்கிய உத்திகளைக் கண்டுபிடிப்பார்கள்.